மூலக்கூற்று உயிர்த் தொழினுட்பவியல்

 • அங்கிகளின் கட்டமைப்பு ரீதியான அடிப்படை அலகு காலமாகும்.
 • கலத் தொழிட்பாடுகளை கட்டுப்படுத்தும் மத்திய நிலையம் கரு ஆகும். அதில் நிறமூர்த்தங்கள் காணபடுகின்றன.
 • நிறமூர்த்தங்களில் உள்ள DNA இனால் அங்கிகளின் இயல்புகள் தீர்மானிக்கின்றன.
 • இந்த இயல்புகளுக்கான தகவல்களை மற்றைய சந்ததிக்கு கடத்தப்படுகின்றன.
 • நிறமூர்த்தங்களில் நேர்கோட்டொழுங்கு முறையில் பரம்பரையலகுகள் அமைந்துள்ளன.
 • பரம்பரையலகுகள் ஒவ்வொன்றும் DNA இந் தனித்துவமான பகுதியாகும்.
 • அங்கிகளின் இயல்புகளில் சில ஒரு பரம்பரையலகினால் அல்லது ஒரு தொகுதி பரம்பறையலகினால் தீர்மானிக்கப்படுகின்றன.
 • ஒவ்வெரு பரம்பரையலகில் சேமிக்கப்பட்டுள்ள செய்தியும் அங்கிகளின் தொழிட்பாட்டுக்கு தேவையான நொதியம், ஓமோன்கள் என்பவற்றை ஆக்கும் புரதங்களை ஆக்குகின்றன.
 • இவ்வாறு அங்கி ஒன்றில் உள்ள எல்லாப் பரம்பரை அலகுகளும் சேர்த்து ஜீணோம் என அழைக்கப்படும்.

 

DNA மீளச்சேர்க்கைத் தொழிநுட்பம்.

 • குறித்த இனம் ஒன்றின் உயிரங்கி ஒன்றின் பரம்பரையலகுகளை வேறொரு அங்கியின் பரம்பரையலகுடன் சேர்க்கும் தொழிநுட்ப முறையாகும்.
 • இதனால் அன்கியொன்றின் இயல்புகள் பற்றிய தகவல்கள் மாற்றியமைக்கப்படுகிறது.
 • அதாவது பரம்பரையலகை வாங்கும் அங்கியின் ஜீனோம் மாற்றியமைக்கப்படுகிறது.
 • பொதுவாக இதற்கு பற்றீரியா, வைரசுக்களின் DNA பயன்படுத்தப்படும்.

காரணம்.

 • தனி ஒரு நிரமூர்த்ததால் ஆனது. நொதியங்கள் / இரசாயனப் பதார்த்தங்களை பயன்படுத்தி கலங்களில் இருந்து வேறுபடுத்தி எடுப்பது இலகுவானது.
 • இவற்றின் DNA பருமனில் சிறியது.
 • கலங்களில் இருந்து DNAஐ வேறுபடுத்திய பின்னரும் அதன் தலைமுறை இயல்புகள் மாறுவதில்லை.
 • புதிய காலமொன்றில் புகுத்திய பின்னரும் உயிர்ப்பாக இருக்கும்.
 • Escherchia coli எனும் பற்றீரியாவே இதொளினுபத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இனமாகும்.

 

பற்றீரியாக்களின் DNA......

 • வட்டவடிவமானது. (மனிதன்- இரட்டைச் சுருள் வடிவம்)
 • பிரதான DNAக்கு மேலதிகமாக Plasmid எனப்படும் சிறிய DNAக்களும் காணப்படும்.
 • கலம் பிரிவடையும் போது அதன் பிரதான DNA, plasmid என்பன இரட்டிப்படைந்து பிரிந்து மகற்கலங்களுக்குள் செல்லும்.
 • Plasmidஇல் உள்ள DNA மூலம் பற்றீயாகுரியப புரதம் தொகுக்கப்படும்

மீளச் சேர்க்கை

 • தேவைப்படும் குறித்த புரதப் பகுதியை தொகுப்பதற்கான செய்தியைக் கொண்ட பரம்பரையலகு பகுதி இனங்காணப்படும்.
 • இனங்காணப்பட்ட குறித்த பரப்பரையலகு Restriction Enzyme மூலம் வேறாக்கப்படும்.
 • பற்றீரியக் கலத்தில் இருந்து பெறப்பட்ட plasmid குறித்த இடத்தில் வெட்டித் திறந்து வேறாக்கப்பட்ட புரதப் பகுதியை தொகுப்பதற்கான செய்தியைக் கொண்ட பரம்பரையலகு பகுதி இடைப்புகுத்தப்படும்.
 • பரம்பரையலகு இடைப்புகுத்தப்பட்ட plasmid மீண்டும் வேறொரு பற்றீரியா (Escherchia coli) காலத்தினுள் புகுத்தப்பட்டு வளர்ப்பூடகம் ஒன்றில் வளர்க்கப்படும்.
 • தற்போது புகுத்தப்பட்ட plasmid கலத்தொழிட்பாடுகளுடன் ஒன்றித்து DNA இரட்டிக்கும் போது இடைப்புகுத்தப்பட்ட பகுதியும் இரட்டிப்படைந்து கொள்ளும்.
 • தற்போது எமக்குத் தேவையான புரதம் இடைபுகுத்தப்பட்ட பரம்பரையலகு செய்தியை கொண்டு தொகுக்கப்படும்.
 • இப்புரதம் சில தூய்மையாக்கும் முறைகள் மூலம் பிரித்தெடுக்கப்படும்.
 • இன்சுலின், வளர்ச்சி ஓமோன்கள் போன்ற புரத ஒமோன்களும் சில நொதியங்களும் இவ்வாறே தொகுக்கப்படுகின்றன.

 

மேம்படுத்தப்பட்ட அங்கிகளின் விருத்தி

 

தாவரங்கள்

 • அதிக விளைச்சளுடைய பீடைகளுக்கு எதிர்ப்புள்ள, குறுகிய கால வாழ்க்கை வட்டமுள்ள, சிறப்பான பழங்களைத் தருகின்ற இயல்புகளை உடைய பரம்பரையலகு துண்டுகளை குறித்த தாவரமொன்றினுள் செலுத்தலாகும்.
 • உயிர்த் தொழினுட்பத்தின் அறிமுகத்துக்கு முன்னர் இவ்வாறன தாவரங்கள் கலப்பு பிறப்பாக்கம் மூலம் செய்யப்பட்டது.
 • எனினும் அவசியம் இல்லாத இயல்புகளும் தாவரங்கள் பெறுவதால் இம்முறை கைவிடப்பட்டுள்ளது.
 • உயிர்த் தொழிநுட்ப முறையில் தேவையான குறித்த இயல்புகளை மட்டும் விருத்தி செய்ய முடியும்.
 • உதாரணம்- Bacillus thuringiensis எனும் பற்றீரிய புகுத்தப்பட்ட நீல்மூஞ்சி வண்டினை எதிர்க்கும் கோதுமை உருவாக்கப்பட்டமை.
 • அன்றாடத் தேவைக்கு ஏற்ற அளவு விட்டமின் Aஐ கொண்ட தங்கத் தானிய (Golden rice) உற்பத்தி

 

விலங்குகள்

 • முக்கியத்துவம் மிக்க புரதத் தேவையை பெற்றுக்க் கொள்வதில் அப்புரத்ததிற்கான பரம்பரையலகை செம்மரியாட்டினுள் புகுத்தி, தேவையான புரதத்தை அதன் பாற் சுரப்புகளில் இருந்து வேறாக்கலாம்.
 • Ex- Emphasima எனும் சுவாச நோய்க்கு Alpha-1-anti trypsin மருந்து உற்பத்தி, குருதி உறையா நோய் சிகிச்சைக்குத் தேவையான குருதி உரைதற காரணி 7 புரத உற்பத்தி.
 • தொகுக்கப்பட்ட குருதி உற்பத்திBeta manufacture


Thanks you for Reading.. If it's useful feel free to share among your friends... :)

Log in to comment