8679

தன்னாட்சி நரம்புத்தொகுதியில் பிரதானமாக இரண்டு பிரிவுகள் உண்டு. அவை,

1. பரிவு நரம்புத்தொகுதி-அவசர காலங்களில் செயற்படுவது.

2. பர பரிவு நரம்புத்தொகுதி-சாதாரன(normal) நேரங்களில் தொழிற்படுவது.

பரிவு, பரபரிவு எனும் சொற்களை அதிகமான மாணவர்கள் மாற்றிக் கொள்வதுண்டு. எனினும் இதனை இலகுவாக ஞாபகம் வைக்கலாம்.

பரிவு, பர பரிவு பற்றிக் கற்கும் போது எனக்கு ஞாபகம் வருவது “para normal” எனும் நான் பார்த்த ஒரு ஆங்கிலப் படத்தையாகும்.

Para – normal, அதாவது பர-நோர்மல். பர பரிவு நரம்பு செயற்படும் போது நாங்கள் normal ஆக இருப்போம்.

பரபரிவு, பரிவு நரம்புகளின் செயற்பாடுகள்

பரிவு நரம்புகள் எதை செய்யுமோ அதற்கு எதிரான செயற்பாட்டையே பர பரிவு நரம்புகள் செய்யும் என்பதை நீர் அறிந்திருப்பீர்.

பரிவு நரம்புகளின் செயற்பாட்டை இலகுவாக ஞாபகம் வைக்க நான் பயன்படுத்திய உத்தி “உங்களை எவரோ கடத்திச் சென்று ஒரு இருட்டறையில் போட்டு அடைத்தால்” உங்கள் உடலில் அநேக மாற்றங்கள் நடைபெறும். இம் மாற்றங்கள் பரிவு நரம்புத்தொகுதியால் தூண்டப்பட்டதாகும்.

Eg:-

  1. கண்மணியின் விட்டம் அதிகரிக்கும். (காரணம்- இருட்டறை)
  2. இதயத்துடிப்பு வீதம் அதிகரிக்கும்.(பயத்தால் இதயம் பட படவென அடிக்கும்)
  3. குருதி அமுக்கம் அதிகரிக்கும்.
  4. சுவாச வீதம் அதிகரிக்கும்.(அதிகம் மூச்சு வாங்கும்)

பரபரிவு எனும் போது பரிவிட்கு எதிரான செயற்பாடுகளை சிந்திக்க.

Log in to comment