நைதரசன் வட்டம் , காபன் வட்டம் போன்றவை மாணவர்களிற்கு ஞாபகத்தில் இருத்துவது சற்று கடினமாக காணப்படும். இதற்கு முக்கிய காரணம் யாதெனில், இவ்வாறான வட்டங்களை ஒரு ஒழுங்கு முறைப்படி ஞாபகத்தில் இருத்தாமை ஆகும்.

இவ்வாறான வட்டங்களை படிக்கும் போது, வட்டத்தில் ஆரம்பிப்பது எங்கு, முடிப்பது எங்கு என்று ஒரு ஒழுங்கு முறையில் ஞாபகம் வையுங்கள். அப்போது அதனை படிப்பது இலகுவாகக் காணப்படும்.

nitrogen-cycle-1
ஆரம்பத்தில் நைதரசன் வட்டத்துடன் தொடர்பான சில எண்ணக்கருக்களை மனதில் இருத்திக்கொள்வோம்.

 • இந்த பூமியில அதிகமான வளங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படுகின்றன.
 • அவ்வாறான மட்டுப்படுத்தப்பட்ட வளங்களில் நைதரசன், கார்பன் என்பனவும் அடங்கும்.
 • அதாவது, நைதரசன் உருவாவதும் இல்லை, அழிவதும் இல்லை.
 • அது ஒரு வட்டப்பதையினூடாக மீள் சுழற்சி(recycle) அடைகின்றன.
 • தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடலில் புரதம் (proteiN) உண்டு. ProtieN இல் நைதரசன் உண்டு.
 • வளிமண்டலத்தில் 78 % ஆன நைதரசன் காணப்படும்.
 • வளிமண்டலத்திலுள்ள நைதரசனை பூமியில் இருத்தும் செயன்முறை நைதரசன் பதித்தல் எனப்படும்.
 • பூமியில் உள்ள நைதரசனை வளிமண்டலத்திட்கு அனுப்பும் செயன்முறை நைதரசன் இறக்கல் எனப்படும்.
 • நைதரசன் வட்டத்தில் பின்வரும் ஒழுங்கு முறையில் நீர் கற்பின் அதை ஞாபகத்தில் வைப்பது இலகு என்று நான் கருதுகிறேன்.
 1. தாவரங்களை விலங்குகள் உட்கொள்ளல். (இதன் போது தாவர உடலில் உள்ள நைதரசன் விலங்குகளின் உடலிற்குள் செல்லும். )
 2. தாவரங்களும் விலங்குகளும் இறத்தல் மற்றும் கழித்தல். (இதன் போது தாவர , விலங்குகளின் உடலில் உள்ள நைதரசன் புவி மேற்பரப்பை அடையும்.)
 3. அமோனியம் சேர்வைகள் உண்டாதல். (இதில் அம்மோனியாயாவாக்கும் பக்டிரியாக்கள் பங்கு பற்றும்.)
 4. நைத்திறேற்றுச் சேர்வைகள் உருவாகுதல்.(இதன் போது அம்மோனியம் சேர்வைகளில் இருந்து நைத்திரேற்று உருவாகும். இதன் போது பங்கு பற்றும் பக்டிரியா. Eg: Nitrobacter, Nitrosomonas)
 5. நைதரசன் இறக்கல். (இதன் போது நைத்திரேற்று சேர்வைகள் வளிமண்டல நைதரசன் (N2) ஆக மாறும். இதில் பங்குபற்றும் பக்டிரியா Pseudomonas denitrificans)
 6. நைதரசன் பதித்தல். நைதரசன் பதித்தல் 3 முறைகளில் நடைபெறும். அவ்வாறு நைதரசன் பதித்ததில் நடைபெற காரணமானவை
 • மின்னல்
 • தாவரம்
 • சில பக்டிரியாக்கள்
 • இதன் போது சில (அவரைக் குடும்ப) தாவரங்களின் வேர்ச்சிறு          கணுக்களில் வாழும் பக்டிரியா மூலம் வளிமண்டல N2 அம்மோனியம் சேர்வையாக மாற்றப்படும்.
 • மின்னல் மற்றும் சில பக்டிரியாக்களினால் வளிமண்டல N2 நைத்திரேற்று சேர்வையாக மாற்றப்படும்.

  7. தாவரம் வேரினால் அம்மோனியம் மற்றும் நைத்திரேற்று சேர்வைகள் அகத்துறிஞ்சப்படல்.

Log in to comment