இன்று உலகில் அதிகம் பேசப்படும் பிரச்சினை 'சூழலில் மனிதனால் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள்' பற்றியதாகும். இதனால் பரீட்சைகளிலும் இவை பற்றிய வினாக்கள் கட்டாய வினாக்களாக இடம்பெறுகின்றன. எனினும் பாடப்புத்தகங்களில் இறுதிப் பகுதியாகவும், கட்டுரை வடிவிலும் காணப்படுவதால் இப்பகுதி மாணவர்களால் புறக்கணிக்கப்படுவதோடு புள்ளி இழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, இப்பகுதியை முடியுமானவரை இலகுபடுத்தித் தருகிறோம். இதனை மனனமிடத் தேவையில்லை எனினும், விஞ்ஞானம் கற்கும் மாணவன் என்ற வகையில் தெரிந்திருக்க வேண்டியவையே! So, just have a look at this before your exams!

 • சூழலில் பாதிப்புகள் ஏற்பட பிரதான காரணமாக விளங்குவது மனிதக் குடித்தொகை வளர்ச்சியாகும்.

World Population Chart

 • ஆரம்ப காலத்தில் குடித்தொகை வளர்ச்சி மந்தமாகக் காணப்பட்டமைக்கான காரணங்கள்,
    1. இயற்கை அனர்த்தங்கள் 
    2. நோய்கள்
 • பிற்பட்ட காலப்பகுதியில் சனத்தொகை வளர்ச்சி வீதம் அதிகரித்தமைக்கான காரணங்கள்,
    1. மருத்துவத் துறையின் வளர்ச்சி.
    2. போதிய உணவு கிடைக்கக் கூடியதாக இருத்தல்.
    3. சுகாதார வசதிகளின் மேம்பாடு.
    4. போக்குவரத்து வசதிகள் அதிகரித்தல்.
 • சனத்தொகை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள பொதுவான பிரச்சினைகள்,
    1. நகரமயமாதல்.
    2. பாலைவனமாதல்.
    3. எயிட்ஸ் போன்ற நோய்களினது பரவல்.
    4. சமூக விரோதச் செயற்பாடுகள் அதிகரித்தல் .
    5. சட்ட விரோத குடிப்பெயர்வுகள்.
    6. முதியவர்களின் குடித்தொகை வீதம் அதிகரித்தல்.
 • இனி பிரதான பிரச்சினைகளை கற்றலுக்கு இலகுவாக பிரச்சினைகளை காரணம், பாதிப்பு, தீர்வு எனும் 3 பகுதிகளாக பிரித்து நோக்குவோம். இவற்றை நீங்கள் சிறுகுறிப்பாகவோ அல்லது அட்டவணையாகவோ பயன்படுத்தலாம்.

1. காடழிப்பு

deforestation-2

 • காரணங்கள் : 
  1. பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக.
  2. கட்டிடங்கள், பாதைகளின் நிர்மானம்.
  3. இயற்கைக் காரணங்கள்.
 • பாதிப்புகள் :
  1. மழைநீர் தரையினால் உறிஞ்சப்படும் அளவு குறைவடைதல்.
  2. நீர் தரைமேற்பரப்பினூடாக வழிந்தோடும் வீதம் அதிகரித்தல்.
  3. மண்ணரிப்பு ஏற்படல்.
  4. தரையின் தரம் குன்றல்.
  5. ஆறு, குளங்களில் வண்டல் தேங்குதல்.
  6. வெள்ளப்பெருக்கு ஏற்படுதல்.
  7. CO2அகற்றப்படும் வீதம் குறைவடைந்து சூழல் வெப்பநிலை அதிகரித்தல்.
  8. உயிர்ப்பல்வகைமை குறைவடைதல்.
  9. கடல் நீர்மட்டம் பாதிக்கப்படல்.
  10. தரைக்கீழ் நீரின் அளவு குறைவடைதல்.
  11. மருத்துவப் பயன்மிக்க மூலப்பொருட்கள் குறைவடைதல்.

2. நீர்ப்பாசன வேளாண்மை 

irrigatedfields

குளங்களில் நீரைத்தேக்கி அவற்றைக் கால்வாய்கள் போன்றவற்றினூடாக பயிர்ச்செய்கை நிலங்களுக்கு செலுத்துதல் நீர்ப்பாசன வேளாண்மை எனப்படும்.

 • காரணங்கள் :
  1. வேளாண்மைக்கு அதிகளவு மழை நீரிலேயே தங்கியிருக்கின்றமை.
 • பாதிப்புகள் :
   1. பயிர்ச்செய்கை நிலத்திலிருந்து நீர் ஆவியாவதால் மண்ணின் உவர்த் தன்மை அதிகரித்து தரிசு நிலங்களாகக் கைவிடப்படுகின்றன.
 • தீர்வுகள் : 
   1. கூட்டுர பயன்பாட்டை அதிகரித்தல்.
   2. தேவையான அளவு நீர்ப்பாசனத்தையே மேற்கொள்ளல்.

3. கைத்தொழில்மயமாக்கம்

pollution steel factory

 • காரணங்கள் :
   1. விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்பவற்றின் மேம்பாடு.
   2. புதிய கண்டுபிடிப்புகளின் பெறுபேறுகள்.
   3. சிறிய அளவிலாக உற்பத்திச் செயற்பாடுகள் போதாமை.
 • பாதிப்புகள் :
   1. நகரமயமாக்கம்.
   2. சூழல் மாசடைதல் அதிகரித்தல்.
   3. பூகோள வெப்பமுறல்.
   4. காலநிலை மாறுபாடு.
   5. நோய்கள் ஏற்படல்.
   6. அகால மரணங்கள் சம்பவித்தல்.
   7. காடுகள் அழிக்கப்படல்.
 • தீர்வுகள் : 
   1. தொழிற்சாலைக் கழிவுகளை பரிகரித்து சூழலில் சேர்த்தல்.
   2. சூழலில் மாசுபடுத்தலை இழிவாக்கும் மாற்று சக்தி முதல்களைப் பயன்படுத்தல்.
   3. திட்டமிட்ட நகர் நிர்மானச் செயற்பாடுகள்.

4. நகரமயமாதல்

t balance

 • காரணங்கள் :
  1. கைத்தொழில் மயமாக்கத்துடன் தொழில் எதிர்பார்ப்பு,வசதியான வாழ்க்கை என்பவற்றுக்காக மக்கள் நகரங்களை நோக்கி குடிபெயர்ந்தமை.
 • பாதிப்புகள் :
   1. திட்டமிடப்படாத மாசுற்ற நகரங்களின் உருவாக்கம். இதன் விளைவாக,
    1. அதிக எரிபொருட் தகனம்.
    2. நீர்ப்பற்றாக்குறை.
    3. வளி மாசடைதல்.
    4. தரைக்கான கேள்வி அதிகரித்தல்.
    5. மாசடைந்த மாடிவீடுகள்.
    6. சமூக விரோத செயல்கள், நோய்கள் அதிகரித்தல்.
    7. சேரிகள் உருவாதல்.
    8. அடிப்படை வசதிவாய்ப்புகள் பலவீனமடைதல்.
    9. வாகன நெரிசல்.
    10. பயணங்களுக்கான கால அளவு அதிகரித்தல், வீணாதல்.
 • தீர்வுகள் : 
   1. ஒழுங்காக நிர்மாணிக்கப்பட்ட பெருந்தெருக்கள், மாடிக்குடியிருப்புகள், கட்டிடங்கள், மைதானங்களை அமைத்தல்.
   2. நடைமுறைச் சேவைகளும், பொதுச்சுகாதார வசதிகளும் ஒழுங்காகப் பெற்றுக் கொள்ளல்.
   3. அதிவேகப் பாதைகள், பெருந்தெருத்தொகுதிகள், சுரங்கப்பாதைகள் போன்றவற்றின் பயன்பாடு.
   4. தனியார் வாகனங்கள் கட்டுப்பாடின்றி நகரங்களுள் புகுவதைக் கட்டுப்படுத்தலும், பொதுப்போக்குவரத்து வசதிகளை ஒழுங்குபடுத்தலும்.

6. சூழல் மாசடைதல்

சூழலினால் உறிஞ்ச முடியாதளவில் கழிவுகள் சூழலிற்கு சேர்க்கப்படல் சூழல் மாசடைதலாகும். இது தரை மாசடைதல், வளி மாசடைதல், நீர் மாசடைதல் என 3 வகைப்படும்.

I. தரை மாசடைதல்

landfill

 • காரணங்கள் :
  1. தரையில் கழிவுப் பொருட்கள் சேர்தல்.
 • பாதிப்புகள் :
   1. சேதனப்பதார்த்தங்கள் பிரிந்தழிகைளயுறாமல் கனிப்பொருள் வட்டங்கள் பாதிக்கப்படுதல்.
   2. விவசாய நிலங்களின் பொருட்டான பற்றாக்குறை.
   3. நீர்நிலைகள் மாசடைதல், தடைப்படல்.
   4. மண்வாழ் உயிரினங்களும், ஏனைய உயிரினங்களும் பாதிக்கப்படல்.
   5. தரைக்கீழ் நீர் மாசடைதல்.
 • தீர்வுகள் : 
   1. திண்மக் கழிவுப் பொருட்களை மீள்சுழற்சிக்குட்படுத்தலும், மீள் பயன்பாட்டுக்குட்படுத்தலும்.

II. நீர் மாசடைதல்

pollution-fact-water-pollution-1024x678

 • காரணங்கள் :
  1. கைத்தொழிற்சாலைக் கழிவுகள் நீருக்குச் சேர்க்கப்படல். (நைத்திரேற்றுச் சேர்வைகள், ஈயம், செம்பு, ஆசனிக்கு, இரசம் போன்ற பாரமான உலோகங்கள், எண்ணெய், வெப்பமான நீர், சாயப் பொருட்கள்)
  2. விவசாய இரசாயனங்கள். (இரசாயனப் பசளைகள், கிருமி நாசினிகள், களை நாசினிகள்)
  3. கதிர்வீச்சுப் பொருட்கள். (பயிர்ச் செய்கை நிலங்கள்,எண்ணெய்க்கலன்கள், அணுமின் பிறப்பாக்கி நிலையங்களில் இருந்து)
 • பாதிப்புகள் :
   1. நோய்கள் பரதவுதல்.
   2. நீர்நிலைகள் நற்போசணையாக்கத்திற்கு உட்படல்.
   3. நீர்வாழ் அங்கிகள் இறத்தல்.
 • தீர்வுகள் : 
   1. தொழிற்சாலைக் கழிவுகளை பரிகரித்த பின் நீர்நிலைகளுக்குச் சேர்த்தல்.
   2. விவசாய இரசாயனங்களைக் குறைத்தல்.
   3. நீர்நிலைகளுக்கு கைத்தொழில் கழிவுகளைச் சேர்ப்பதற்கு கட்டுப்பாடுகளை மேற்கொள்ளல்.

III. வளி மாசடைதல்

air p

பிரதான மாசாக்கிகள் : குளோரோபுளோரோகாபன், காபனோரொட்சைட்டு, ஈயத்துகள்கள், கன்னார் துகள்கள், காபன் துணிக்கைகள்.

 • காரணங்கள் :
  1. கைத்தொழிற்சாலைகள், மோட்டார் வாகனங்கள், வீடுகளில் இடம்பெறும் எரிபொருள் தகனம்.
  2. எண்ணெய்க் கிணறுகளில் ஏற்படும் தீ.
  3. எரிமலைச் செயற்பாடுகள்.
 • பாதிப்புகள் :
   1. சுவாசப் பாதிப்புகள்.
   2. மரணங்கள்.
   3. புற்றுநோய்.
   4. மூளை வளர்ச்சி பாதிக்கப்படல்.
   5. நிர்ப்பீடனக் குறைபாடுகள்.
   6. தாவர, விலங்குகள் நஞ்சூட்டப்படல்.
   7. அமில மழை.
   8. பயிர் விளைச்சலின் அளவு குறைதல்.
   9. புராதன சின்னங்கள், கட்டிடங்கள் பாதிக்கப்படல்.
 • தீர்வுகள் : 
   1. வாயு நிலைக்கழிவுகளை பரிகரித்து விடுவித்தல்.
   2. எரிபொருட்களுக்குப் பதிலாக வேறு சக்தி முதல்களைப் பயன்படுத்தல்.
   3. காடுகளைப் பாதுகாத்தல்.
Log in to comment