• இவை ஒரு தளத்தில் தாக்கும்.
  • சமனான இரு விசைகள் ஒரு தாக்கக்கோட்டின் வழியே  ஒரு புள்ளியில் எதிரெதிர் திசைகளில் தொழிற்படும் போது அவை ஒன்றையொன்று சமப்படுத்தும்..
  • பொருள்களில் சமனானதும் எதிரானதுமான விசைகள் தாக்குவதால் அவை ஓய்வில் இருக்கின்ற்ன.
  • இவ்வாறு ஓய்வில் இருப்பதற்கு அதில் தொழிற்படும் விளையுள் விசை பூச்சியமாகும்.

  இரண்டு விசைகளின் சமநிலை.

ஒருதளவிசைகளின் சமநிலை

  • பொருளொன்றின் மீது இரு விசைகள் தாக்கும் போது அப்பொருள் சமநிலையில் இருப்பதற்கு அவ்விசைகள் சமனாகவும்,எதிர்த்திசையிலும்,ஒரே தாக்கக்கோட்டிலும் தொழிற்பட வேண்டும்.

ஒருதளவிசைகளின் சமநிலை

 மூன்று விசைகளின் சமநிலை.

1)மூன்று சமாந்தர விசைகளின் சமநிலை.

மூன்று சமாந்தர விசைகள் ஒரு பொருளில் தொழிற்பட்டு அப்பொருள் சமநிலையில் இருக்க வேண்டுமாயின் அவை:

ஒருதளவிசைகளின் சமநிலை

  •  ஒரே தளத்தில் தாக்க வேண்டும்.
  •  இரு விசைகள் ஒரு திசையிலும் மற்றையது அதற்கு எதிர் திசையிலும் தொழிற்பட வேண்டும்.
  • ஒரே திசையில் தொழிற்படும் இரு விசைகளின் விளையுள் 3ம் விசைக்கு சமனாக இருத்தல் வேண்டும்.

2)மூன்று சமாந்தரமல்லாத விசைகளின் சமநிலை.

3 சமாந்தரமல்லாத விசைகள் ஒரு பொருளில் தொழிற்பட்டு அப்பொருள் சமநிலையில் இருப்பதற்கு

ஒருதளவிசைகளின் சமநிலை

  • ஒரே தளத்தில் தாக்க வேண்டும்.
  •  3 விசைகளினதும் தாக்கக்கோடு ஒரு புள்ளீயில் சந்திக்க வேண்டும்.
  • இரு விசைகளின் விளையுள் 3ம் விசைக்கு சமனாகவும் அதன் தாக்கக்கோட்டிற்கு எதிர் திசையிலும் அமைய வேண்டும்.

ஒருதளவிசைகளின் சமநிலை

Log in to comment