Print
Category: இரசாயனவியல்
Hits: 3836

பரீட்சை மண்டபத்தில் O/L மாணவர்களுக்கு பொதுவாக குழப்பிக் கொள்ளும் பகுதிகளே இவை. எனவே, இந்தக் குழப்பத்தை தீர்ப்பது எப்படி?

அனோட்டு எது? கதோட்டு எது? இதற்கு எளிமையான பதில், சுற்றுக்கு இலத்திரனை வழங்குவது (ஒட்சியேற்றம்) அனோட்டு (இலத்திரனைப் பெறல் -தாழ்த்தல் - கதோட்டு) ஆகும். உதாரணமாக,

எளிய மின்கலத்தில் சுற்றுக்கு இலத்திரனை வழங்குவது Zn தகடாகும். So, Zn தகடு அனோட்டாகவும், Cu தகடு கதோட்டாகவும் தொழிற்படும்.

voltaic cell

எனவே,  இலத்திரன் அனோட்டில் இருந்து கதோட்டுக்கு பாயும் போது மின்னோட்டம் அதற்கு எதிர்த்திசையில் பாயும். So, கதோட்டு நேர் முனையாகவும், அனோட்டு எதிர் முனையாகவும் காணப்படும்.

இவ்வாறே மின்பகுப்புமாகும். ஆனால், அங்கு மின்னோட்டத்தை நாம் வழங்க வேண்டும். So, மின்கலத்தை இணைப்பதிலேயே முனைவுகளின் வகை தங்கியுள்ளது எனலாம். எனவே வழமை போல் மின்கலத்தின் நேர் முடிவிடம் தொடுக்கப்படுவது நேர் முனைவு எனவும், மறை முடிவிடம் தொடுக்கப்படுவது மறை முனைவு எனவும் தீரமானித்துக் கொள்ளலாம். சரி, அனோட்டு, கதோட்டை இனி நீங்களே தீர்மானிப்பீர்கள் என நினைக்கிறேன்.

மின்பகுப்பின் போது சுற்றினூடாக இலத்திரன் செல்லும் பாதையை கீழுள்ள படம் காட்டுகிறது.

hydrogen-electrolysis

 

எனவே நேர் மின்வாயே இலத்திரனை வழங்க வேண்டும் என அறிந்திருப்பீர்கள். So, மின்பகுப்பில் நேர் முனைவு அனோட்டாகவும், மறை முனைவு கதோட்டாகவும் தொழிற்படுமல்லவா?.

எனவே, முனைவுகளைத் தீர்மானிக்க அனோட்டுக்கான வரைவிலக்கனத்தையும், மின்னோட்டத்தின் திசையையும் கவனத்தில் கொண்டால் அனோட்டு+/- என மனனமிடத் தேவையில்லைதானே!

 

Log in to comment