குவிவு வில்லையின் குவியத்தூரம் துணிய பல முறைகள் உண்டு. இவற்றுள் முக்கியமான 10 முறைகளை இந்த Article கொண்டுள்ளது. 

இந்த 10 முறைகளையும்  5 categoryஇனுள் அடக்கலாம். 

 1. அண்ணளவாக காணல்
 2. ஆடிகளைப பயன்படுத்திக் காணல்
 3. மெய்விம்பத்தை பயன்படுத்திக் காணல்
 4. மாய விம்பத்தைப் பயன்படுத்திக் காணல்
 5. குழிவுவில்லையை பயன்படுத்திக் காணல்

அண்ணளவாக காணல்

 • பல சந்தர்ப்பங்களில் எமக்கு ஒரு குவிவு வில்லையின் குவியத்தூரத்தை அண்ணளவாக மதிப்பிடவேண்டிய தேவைகள் ஏற்படுவதுண்டு. 

குவியத்தூரத்தை அணணளவாக காணல்

 • இவ்வாறாக ஒரு தூரப் பொருளின் விம்பத்தை ஓரளவு நன்கு ஒளிச்செறிவுள்ள இடத்தில் ஒரு திரையில் பெறும் போது வில்லைக்கும் திரைக்குமிடையாண தூரம் குவிவு வில்லையின் அண்ணளவான குவியத் தூரத்தைத் தரும்
 • வில்லை பரிசோதனைகளில் தேவையற்ற கதிர்கள் கண்ணை வந்தடைவதைத் தடுத்து விம்பத்தைத் தெளிவாக அவதானிப்பதற்காக திரை வைக்கப்படுகிறது

 

ஆடிகளைப் பயன்படுத்திக் காணல்

தளவாடியுடன் குவியத்தூரம் காணல்

 • இவ்வாறாக தளவாடி மேல் வில்லையை வைத்து பொருள் ஊசி(Blue coloured arrow) விம்பத்துடன்(green coloured arrow) பொருந்தும்போது பொருள் ஊசிக்கும் குவிவு விக்லைக்குமிடையான தூரம் குவியத் தூரம் f ஐ தரும்

தளவாடியுடன் குவியத்தூரம் காணல்

 • இந்த தளவாடி முறையில் மேலுள்ளவாறு தளவாடிக்கும் வில்லைக்குமிடையான தூரத்தை எவ்வாறு மாற்றினாலும் பாதிப்பில்லை.  

குவிவாடியுடன் குவியத்துரம் காணல்

 • இது குவிவாடியை use பண்ணும் method. இதில் பொருள் ஊசியும் விம்பமும் பொருந்தும் வரை வில்லைக்கும் குவிவாடிக்குமிடையான தூரத்தை செப்பஞ்செய்ய வேண்டும். தளவாடி practical போன்று இங்கு ஆடியையும் வில்லையையும் விரும்பியவாறு வைக்க முடியாது. 
 • விம்பமும் பொருளும் பொருந்தும் நிலையில் ஒளிக்கதிரானது ஆடியில் செங்குத்தாகப் பட்டு அதே பாதையில் திரும்பிச் செல்லும். இதன்போது வில்லை,ஆடிக்கிடையான தூரம் a, குவிவாடியின் ஆரை r என்பன தெரிந்தால் குவிவு வில்லைக்குரிய விம்பதூரம் துணியலாம். அதாவது; a+r=v
 • பின் வில்லைக்கு வில்லைச் சூத்திரம் போட்டு குவியத் தூரம் காணலாம்

மெய்விம்பத்தைப் பயன்படுத்தி காணல்

 • இதில் 1st is இடப்பெயர்ச்சி முறை. இதற்கு திரைக்கும் பொருளுக்குமான தூரம் 4fஐ விட அதிகமாக இருக்க வேண்டும். 

மெய்விம்பத்துடன் குவியத்தூரம் காணல் 1

 • இவ்வாறு வெவ்வேறு d க்கு ஒத்த l ஐ அறிந்து கணிப்பை செய்து graph வரைந்தால் "படித்திறன/4" குவியத்தூரத்தை தரும்.
 • இதில் h1>h2 என்றவாறு பருமன் இருப்பினும் விம்பங்களுள் h1 ஐ விட h2 ஏ பிரகாசம் கூடியது.
 • காரணம், விம்பத்துரம் அதிகரிக்கும் போது கதிர்களின் சிதறல் அதிகரிப்பதால் பிரகாச்ம் குறைகிறது.  

 

 • அடுத்தது ஒளிர்த்த கண்ணாடி அளவிடையைப் பயன்படுத்தி விம்ப உருப்பெருக்கத்தை வைத்து பின்வருமாறு மேற்கொள்ளப்படும் 

மெய்விம்பத்துடன் குவியத்தூரம் காணல் 2

 

 • இது போன்று இன்னமொருமுறை கிழ் காட்டப்பட்டுள்ளது. இதில் விம்பத் துரத்தை சரியாக காண்பதற்காக இன்னமொரு ஊசியும்(Brown coloured) பயன்படடடத்தப்பட்டு பின் வெவ்வேறு பொருள் தூரத்துக்கான விம்பத்தூரம் கண்டு graph வரைந்து f காணப்படுகிறது.  

மெய்விம்பத்துடன் குவியத்தூரம் காணல் 3

மாய விம்பத்தைப் பயன்படுத்திக் காணல்

மாய விம்பத்துடன் குவியத்தூரம் காணல்1

 • இங்கு மாயவிம்பத்தின் நிலையை சரியாக அடையாளம் காண பொருள் ஊசியைவிட பெரிய ஊசி தேவைப்படுகிறது.

 

மாய விம்பத்துடன் குவியத்தூரம் காணல் 2

 • இதுவும் மேலுள்ளது போன்ற ஒன்று. But the different is இங்கு மாய விம்பத்தை அடையாளமிட இரண்டாவது ஊசியின் தளவாடியால் தெரித்துப் பெறப்பட்ட விம்பம் பயன்படுத்தப்படுகிறது.
 • பின் வழமைபோல வில்லைச் சூத்திரம் பயன்படுத்தி graph மூலம் குவியத்தூரம் காணப்படுகிறது. 

குழிவுவில்லையைப் பயன்படுத்திக் காணல்

குழிவுவில்லையுடன் குவியத்தூரம் காணல்

 

Feel free to discuss your doubts and questions with us. Click this to post your doubts and questions. 

Thanks for reading...

keep sharing and stay tuned with us...

Log in to comment