இது  பொதுவாக பெரும்பாலான studentsக்கு கடினமாக அமைகின்ற ஒரு section. We have worked on it to make it easier for you. Especially for one of our users who asked us to write us on this topic.

Let's come to the topic.

 

பொதுவாக சேதனச் சேர்வைகளின் கொதிநிலை பற்றி கருதும்போது, 1st ஞாபகம் வைக்க வேண்டிய point....

 • ஒரே வகையான சேதனச் சேர்வைகளின் கொதிநிலை மூலக்கூற்றுத்திணிவு அதிகரிப்புடன் அதிகரித்துச்செல்லும்

இனி வெவ்வேறு வகைச் சேதனச் சேர்வைகளிடையே கொதிநிலை எவ்வாறு வேறுபடும் எனும் topicஇனுள் நுழைய முன் we have to know why it differs so.

 

கொதிநிலை என்றால் என்ன?

Simply, திரவநிலையிலுள்ள ஒரு பதார்த்தம் கொதித்து வாயு நிலையை அடையும் நிலையை அடைய எடுக்கும் வெப்பநிலை.  

மூலக்கூற்றிடைக் கவர்ச்சி இதை தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாக அமைகிறது.

அதாவது முலக்கூற்றிடைக்கவர்ச்சி வலிமை கூடியதாக இருக்கும் போது தனது நிலையை (திரவம்-->வாயு) மாற்றிக்கொள்ள கஷ்டப்படும்.  

And vise versa is true. 

 

இதனடிப்படையில் நோக்கும்போது, எமக்கு அவசியமான சேர்சைகளுள் அவற்றின் கொதிநிலைகள் பின்வருமாறு வேறுபடுகிறது. 

இது பின்வரும் conditions இன் கீழ் மட்டும் உண்மையாகும். 

And பொதுவாக எமது exams இல் இந்த conditions க்கு உட்பட்ட கேள்விகளே வருகிறது. 

Conditionsஆவன:

 1. சேர்வைகளின் மூலர்திணிவுகள் ஏறத்தாழ சமனாக இருக்க வேண்டும்
 2. ஒவ்வொரு மூலக்கூறிலும் ஒவ்வொரு தொழிற்பாட்டுக் கூட்டம் மட்டும காணப்படும் போது. 

 

 இந்த conditions க்கு அமைவாக சேதனச் சேர்வைகளின் கொதிநிலை இறங்குவரிசை பின்வருமாறு அமைகிறது.

boiling point trend among organic compounds for gce a level chemistry 

இந்த வரிசையை ஞாபகம் வைத்தே I used to do the questions. But exam hall இல் புதிய புதிய doubts வருவது இயல்பு. So safetyக்காக இந்த மாற்றங்களுக்குரிய reasons ஐயும் தெரிந்து கொண்டால் குழம்பும்போதும் யோசித்து பிடித்து விடலாம்

இனி இவற்றுள் முக்கியமான ஒவ்வொரு சேர்வைகளும் ஏன் அவ்வாறான கொதிநிலையைக் கொண்டுள்ளன என்பதைப் பார்ப்போம்.

 

Amides/அமைட்டுகள்

 • பொதுவாக அனைத்து சேதனச் சேர்வைகளிலும் இவை உயர்வான கொதிநிலை உடையன.

Carboxilic acid

 • இது தனது மூலக்கூறுகளுக்கிடையே மிக வலிமையான H பிணைப்பைத் தோற்றுவித்து இரட்டை மூலக்கூற்று வடிவில் காணப்படுவதால் கொதிநிலையில் கணிசமான அதிகரிப்பு உள்ளது.
 • hydrogen bonds in carboxilic acid 

Alcohol/அற்ககோல்

 • இவற்றிலும் அதிமுனைவாக்கத்துக்குரிய O-H பிணைப்பு உண்டு. ஆகவே தனது மூலக்கூறுகளுக்கிடையே வலிமையான H பிணைப்பு உள்ளது.
 • hydrogen bond in alcohols 
 • நீரையும் இந்த categoryஇலேயே நோக்கலாம். நீரில் alcoholஇல் உள்ளதைப் போல 2 H பிணைப்புகள் உள்ளமையால் இது alcohols ஐ விட கொதிநிலை கூடியது. 
 • H2O2ஆனது நீர், அற்ககோல் இரண்டையும் விட கொதிநிலை கூடியது.
 • alcohols boiling points 

Carbonyl compounds/காபனைல் சேர்வைகள்

 • இவற்றிலுள்ள double bond O காரணமாக C=O பிணைப்பு உயர் முனைவாக்கம் உடையது. இதனால் இம் மூலக்கூறுகளிடையே ஏற்படும் "உயர் முனைவுக்கவர்ச்சி"இனால் இவை கொதிநிலையில் உயர்வாக உள்ளது. 

Amines/அமைன்கள்

 • இவற்றில் N-H பிணைப்பில் H பிணைப்பு இருப்பினும் இது வலிமை குறைந்தது

Halo hydrocarbons/அலசன்சேர் ஐதரோகாபன்கள்/அற்கைல் ஏலைட்டுக்கள்

 • ஏலைட்டுக்கள் மின்னெதிர்த் தன்மை கூடியவை. எனவே R-X பிணைப்பின் முனைவாக்கத்தால் இவற்றின் கொதிநிலை ஓரளவு உயர்வு. 

Ether/ஈதர்

 • இவை தமது மூலக்கூறுகளிடையே H பிணைப்பைத் தோற்றுவிக்காது. 

Hydrocarbons/ஐதரோகாபன்கள்

 • இவையே மிகக் குறைந்த கொதிநிலை உடைய சேர்வைகள். 
 • இவற்றுள் அடங்கும் CH4 அனைத்து சேதன, அசேதனச் சேர்வைகளையும் விட கொதிநிலை குறைந்த சேர்வை
 • hydrocarbons boiling point values
 • இவற்றின் கொதிநிலையை கிளைச்சங்கிலிகளும் பின்வருமாரு பாதிக்கும். 
 • hydrocarbins boiling points trend 
 • அதாவது இவ் hydrocarbonsஐ ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்குவதை imagine பண்ணினால்...கிளைகளே இல்லாதது மிக நெருக்கமாக அடுக்கப்படும். இவ்வாறு அந்த கிளைகள் இருக்கும் இடம், கிளைகளின் எண்ணிக்கை என்பவற்றைப் பொறுத்து நெருக்கம் வேறுபடும். நெருக்கம் கூடும்போது கொதிநிலையும் கூடுகின்றது. 
Log in to comment